தருமபுரி: ஒகேனக்கல்லில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
தருமபுரி: ஒகேனக்கல்லில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில் மேம்படுத்தப்பட்டுவரும் பணிகளையும், வெள்ள பெருக்கின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து சுற்றுலா துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் தகி. சாந்தி நேற்று செப்டம்பர் 11 மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கின்போது பயணிகள் நடைபாதை, தொங்கு பாலம் மற்றும் பரிசல்துறை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளதையும், பரிசல்களின் உறுதி தன்மைகளை ஆய்வு செய்து, பரிசல்களை ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்து, பரிசலில் வேயப்பட்டுள்ள மூங்கில் பழுதடைந்து இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றும் இடத்தில் செய்யப்பட்டு வரும் தூய்மை பணிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், சுற்றுலா பயணிகளின் உடமைகள் கண்காணிப்பு கேமரா பெறுத்துவது குறித்தும் அறிக்கை சமர்பிக்க சுற்றுலா துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி