ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட்- ரியல்மி பேட் 2 லைட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.5 இன்ச் 2K LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே, நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.