தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் தீவிரம் குறைந்த நிலையில் காவிரி ஆற்றில் படிப்படியாக நீர்வரத்து சரிந்து காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று(ஆக.29) வரை வினாடிக்கு 5,500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று(ஆக.30) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,500 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. மேலும் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலிகுண்டுளலுவில் தொடர்ந்து மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.