தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் விளங்குகிறது. தமிழா்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய இந்த மரம் பரமாரிப்பில்லாமலே உள்ளது. காலத்துக்கும் பயன் அளிக்கும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞா்களிடம் பனையின் சிறப்பைக் கொண்டு செல்லவும் தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஒரு கோடி பனை விதைகளை நடு நெடும்பனியானது இன்று முதல் துவங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம், தருமபுரி மாவட்ட நிருவாகம் இணைந்து ஒருங்கிணைந்து காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி நடைபெற்று வருகிறது.
38 மாவட்டங்களைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட அமைப்புகள், 12, 525 ஊராட்சிகள், 1, 00, 000 தன்னார்வலர்கள் ஈடுபட்டு ஒரு கோடி பனை விதைகளை நடுகின்றனர். இந்தப் பணியை ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் எம் எல் ஏ ஜிகே மணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவட்ட அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா உள்ளே தன்னார்வலர்கள் அமைப்புகளும் கலந்து கொண்டனர்.