தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி

80பார்த்தது
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் போதை பொருட்களுக்கு எதிராக சிறப்புரை ஆற்றினார். பேரணிக்கு மாவட்ட துணை தலைவர் பாபு தலைமை வகித்தார். பேரணியில் மாவட்ட செயலாளர் ராயல் இஸ்மாயில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் கடைக்கு சென்றதால் சென்றதால் மாணவன் மாணவன் பாஸ் மார்க் எடுக்கவில்லை. நாடு வீடும் கெடலாமா. கெடுவதற்கு நாம் விடலாமா. கெடுவதற்கு நாம் விடலாமா. மதுவை பழச்சாறு என்று நினைத்தாயா.. அது மெல்ல கொள்ளும் விஷமாகும். தந்தை கெட்டதும் மதுபாலே பிள்ளை கேட்டதும் அதுவாலே. உள்ளிட்ட
போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்திவாறு தருமபுரி வேல் பால் டிப்போ பகுதியில் தொடங்கி கடைவீதி வழியாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சுலைமான் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி