தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வடக்கு ஒன்றியத்தின் பாப்பாரப்பட்டி பேரூராட்சி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் பாப்பாரப்பட்டி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் சரவணன் தலைமை வைத்தார். மாதேஷ், சிவகுமார், பெரியசாமி, முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாநில விவசாயி தொண்டர் அணி துணைத் தலைவர் இன்பசேகரன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். மணி, பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர் சபரிநாதன் பேரூர் கழக செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பணிகள் குறித்தும். இல்லாம் தேடி இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல், ஊர்தோரும் மகளிரணி உறுப்பினர் சேர்த்தல். நாடாளுமன்ற உறுப்பினர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தல். கழக களப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.