தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் மதிகோன்பாளையம் கே பி ஜே திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார். வரவேற்புரையாக நகர கழக செயலாளர் நாட்டான் மாது முன்னிலை. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் மாவட்ட கழகப் பொருளாளர் தங்கமணி மாநில கைம்பெண் வாரிய உறுப்பினர் ரேணுகா தேவி மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி தர்மபுரி நகர மன்ற துணைத் தலைவர் நித்திய அன்பழகன். முன்னில வகித்தனர். மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார். மாநில சட்ட துறை இணைச் செயலாளர் தாமரைச் செல்வன் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மச்செல்வன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
இந்த கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் மகளிர் உறுப்பினர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை வேண்டும் தமிழக அரசு சாதனைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.