நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் (செப் 7) கொண்டாடப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் 1, 341 சிலைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர் இந்த சிலைகள் இன்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், ஈச்சம்பாடி அனை, நாகாவதி அனை, உள்ளிட்ட 7 இடங்களில் விநாயகர் சிலைகள் காவல்துறை பாதுகாப்புடன் விஜர்சனம் செய்ய மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே ஒகேனக்கல் காவிரியில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெரிய சிலைகள் கிரேன் மூலம் காவிரியில் கரைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் மற்றும் தீயனைப்பபு துறையினர் பலத்த பாதுகாப்புடன் விஜர்சனம் செய்யப்படுகிறது.