தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து படிப்படியாக நீரின் அளவும் சரிந்து காணப்பட்டது.
நேற்று(ஆக.27) மாலை வரை வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று(ஆக.28) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 5, 000 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர்வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.