ஒகேனக்கல்லில் 19000 கன அடியாக நீர்வரத்து நீடிப்பு

56பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக தமிழக கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று செப்டம்பர் 8 காலை 6 மணி நிலவரப்படி 19 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து ஏழாவது நாளாக பரிசல்கள் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி