சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது, மனைவியின் தொலைபேசி அழைப்பு தரவுகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, அதனை நீதிமன்றத்தில் விவாதத்தின்போது சமர்பித்துள்ளார். அதற்கு, “கணவர் - மனைவி ஆகியோரின் தனி தகவல்களும் மதிக்கப்பட வேண்டும். ஒருவரின் தகவலை அவருக்கு தெரியாமல் இன்னொருவர் எடுப்பது அவரின் privacy-க்குள் தலையிட்டதாகதான் கருதப்பட வேண்டும். ஆகையால் அந்த ஆவணத்தை ஏற்க முடியாது” என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.