20 நிமிட வாக்கிங் போதும்.. இதயத்திற்கு நல்லது
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக நேரத்தை ஒதுக்குவது அவசியம். படிக்கட்டு ஏறுதல், வேகமான நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற எளிய உடற்பயிற்சிகளே இதயத்தை பாதுகாக்கும்.தினமும் 20 முதல் 27 நிமிடங்கள் வரை உடல் இயக்கத்தில் இருந்தாலே போதும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த லேசான உடற்பயிற்சி, இதய நோய் அபாயத்தை 28 சதவீதம் வரை குறைக்கும் என்கின்றனர். 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.