மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவாடோரியல் கினியாவில் அரசு அதிகாரியான பால்டசார் எங்கொங்கா என்பவர், பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்த 400 ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளது. மற்றொரு ஊழல் குற்றச்சாட்டுக்காக அவரது வீட்டில் சோதனை செய்தபோது இந்த வீடியோக்கள் சிக்கியுள்ளன. அந்த வீடியோக்களில் பால்டசார் அவரது சகோதரரின் மனைவி, நாட்டு அதிபரின் தங்கை, 20 அமைச்சர்களின் மனைவிகள், போலீஸ் இயக்குனரின் மனைவி என பல்வேறு முக்கிய நபர்களின் மனைவிகளுடன் உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.