கடலூர் மாவட்டம் சிதம்பரம் லேனா திரையரங்கில் அமரன் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை தடை செய்ய வலியுறுத்தி நேற்று எஸ். டி. பி. ஐ கட்சியினர் திரையரங்கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை நகரத் தலைவர் அப்துல்கபூர் தலைமை தாங்கினார். படத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கை தடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.