கடலூர் மாவட்டம் திருவதிகை - பாலூர் சாலையில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் பண்ருட்டி நகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் க இராஜேந்திரன் தலைமையில் திருப்பணிகள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.