இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், போக்குவரத்தை எளிதாக்க சாலையின் இடதுபுறத்தில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தினர். இதனால், குதிரை வண்டிகள் ஓட்டுபவர்களுக்கு, தங்களது முன்னால் வரும் மற்ற வாகனங்களை பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, வலது பக்கம் நகர்ந்து உட்கார ஆரம்பித்தனர். வண்டிகள் கார்களாக மாறின. கார்களில், ஓட்டுநருக்கு தெளிவாக பார்ப்பதில் சிரமம் ஏற்படாமல் இருக்க, ஓட்டுநர் இருக்கை வலது பக்கம் வைக்கப்பட்டது.