சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் சென்று விரைவு ரயிலில் பயணித்த சில பயணிகள் ரயிலில் உள்ள கேண்டினில் வாங்கிய 'ரயில் நீர்' என விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டிலில் இருந்து ஆல்கஹால் வாடை வீசியதாக அங்கிருந்த சில பயணிகள் புகார் கொடுத்தனர். மேலும் அங்கிருந்த புகார் புத்தகத்திலும் தங்களுடைய புகாரை எழுதியுள்ளனர். கடந்த ஒரு வருடமாகவே இதுபோன்ற ஐ.ஆர்.சி.டி.சியின் 'ரயில் நீர்' பாட்டிலில் மது வாடை வீசுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.