இந்த பிரபஞ்சம் ராஸ்பெர்ரி பழத்தின் சுவையையும், ரம், சாராயத்தின் வாசனையையும் கொண்டிருக்கும் என்று 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தில் உள்ள மேகங்களில் எத்தில் ஹால்கஹால் அதிக அளவில் இருக்கிறது. இதுதான் இந்த சுவைக்கு காரணம். இந்த மேகங்களை வைத்து பூமியில் உள்ள அனைவருக்கும் அடுத்த 100 கோடி வருடங்களுக்கு ஃப்ரீ பீரை கொடுக்க முடியும். ஆனால், இந்த மேகங்களில் சிறிதளவு ஹைட்ரஜன் சயனைடும் கலந்திருக்கிறது.