பீகார் மாநிலம் பராவ்னி ரயில் நிலையத்தில் ரயிலின் இணைப்பை திறக்கும் பணியின் போது ரயில் எதிர்பாராதவிதமாக பின்னோக்கிச் சென்றதால், அமர் குமார் ராவ் என்ற ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ரயில் ஓட்டுனர் ரயிலில் இருந்து வெளியேறி தப்பியோடிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.