
கடலூர்: லாரி மோதியதில் 30 ஆடுகள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் அரியங்குடியை சேர்ந்த முருகேசன் இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வட மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி வந்து கிடை அமைத்து வருவாய் ஈட்டி வந்தார். நேற்று ராமநாதபுரம் கொரக்கவாடி சாலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது அவ்வழியே பின்னால் வந்த மினி லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆடுகள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 30 ஆடுகள் அதே இடத்தில் உயிரிழந்தன. இது குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.