தமிழக முதல்வர் கடலூர் மாவட்டம் வேப்பூரில் பெற்றோர்களை கொண்டாடுவோம் 7 வது மண்டல மாநாடு அரசு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், வேப்பூர் அரசு விழா நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் , காவல் கண்காணிப்பாளர்கள் S. ஜெயக்குமார் , சரவணன் I, சாய் பிரனீத் ஆகியோர் உடன் இருந்தனர்.