கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூர் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் ஆலய மதில் சுவர் மற்றும் கும்பாபிஷேகத்திற்கான கட்டுமான பணிகள் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவில் உள்ள ஒரு பக்க மதில் சுவர் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும் இதனை உடனடியாக சீரமைக்க வேண்டியுள்ளதால் பக்தர்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து தருமாறு கோவில் நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.