பெண்ணாடம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது..

69பார்த்தது
பெண்ணாடம்: லாட்டரி சீட்டு விற்றவர் கைது..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான காவல் துறையினர் பெண்ணாடம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது லாட்டரி சீட்டு விற்றதாக அக்ரஹார தெருவை சேர்ந்த கோபால் பிள்ளை மகன் மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், ஒரு செல்போன் மற்றும் ரூபாய் 2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி