கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் மழையில் நனைந்து வீணானது.