கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெருமுளை ஆதிதிராவிட பொதுமக்கள் பல ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு அனைத்து தரப்பட்ட அதிகாரிகள் இடமும் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாலும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாலும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் பெருமுளை மயானத்தில்(சுடுகாட்டில்) மாபெரும் காத்திருப்பு போராட்டம் நேற்று 11 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.