கடலூர்: அரசு கல்லூரி மாணவியர் விடுதியை திறந்து வைத்த அமைச்சர் கணேசன்

56பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அரசு கல்லூரி மாணவியர் விடுதி மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிய விடுதி திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமை தாங்கினார். 

கூடுதல் ஆட்சியர் சரண்யா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்துகொண்டு விடுதியை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர செயலாளர் வி.பி.பி. பரமகுரு, நகர்மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், கல்லூரி முதல்வர் ராஜசேகர், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி விக்கி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆக்கனூர் பாரதிராஜா, நகர் மன்ற உறுப்பினர்கள், விடுதி காப்பாளர், அலுவலக பணியாளர்கள், மாணவிகள், கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி