திட்டக்குடி - Thittakudi

கடலூர்: தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர்

கடலூர்: தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த முதியவர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுபாக்கம் கொளவாய் அரசு காப்புக்காட்டில் முதியவர் ஒருவர் வேட்டியால் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த சிறுபாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பது தெரிந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக 2 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காப்புக்காட்டில் தூக்கிட்டுத் தொங்கினார் என கூறப்படுகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என சிறுபாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్