கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடத்தைச் சேர்ந்த செல்வம்மாள் வயது 67 இவர் கடந்த 14 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த கணவரின் படத்துக்கு மாலை அணிவித்த போது விளக்கிலிருந்து சேலையில் தீப்பற்றியதில் பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வம்மாள் அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.