சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இன்று (மார்ச். 02) பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை சுவைத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.