கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று மார்ச் 10 ஆம் இரவு 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை மூன்று முறை மாசி மாத ஜோதி தரிசனம் காணப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.