கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், விழப்பள்ளம் சிங்கபுரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், இந்திர விமானத்தில் வள்ளி தேவசேனா சமேத சிங்கபுரி செல்வ சிங்காரவேலர் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.