

குறிஞ்சிப்பாடி: சாலை மறியல் போராட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழு நிலவு இளைஞர் திருவிழா மாநாட்டுக்கான சுவர் விளம்பரம் குறிஞ்சிப்பாடி நகரத்தில் செய்யப்பட்டது. அந்த விளம்பரத்தை வன்னியர்களின் அடையாளமாக இருக்கக்கூடிய வன்னியர் கலசத்தை அழித்த மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.