தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குறிஞ்சிப்பாடி மத்திய ஒன்றியத்தில் தம்பிபேட்டை, T-பாளையம், கிருஷ்ணன்குப்பம் மற்றும் ரங்கநாதபுரம் ஊராட்சி கூட்டம் தம்பிப்பேட்டை பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிளைகளுக்கான ஆய்வு மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.