கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரயிலடியில் கனமழையின் காரணமாக ஒரு சில கடைகள் வெளியே அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இது மட்டும் இல்லாமல் வாகன ஓட்டிகள் அவதி அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.