சூலூர்: தேசிய மாணவர் படை சிறப்பு முகாம்!

60பார்த்தது
சூலூர் ஆர். வி. எஸ். கலை அறிவியல் கல்லூரியில் கோவை 4 தமிழ்நாடு பட்டாலியன் சார்பாக தேசிய மாணவர் படை சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சிறப்பு முகாம், கோவை மண்டல என். சி. சியின் குடியரசு தின அணிவகுப்புக்கான தேர்ச்சி முகாம் என இரு பிரிவுகளாக நடைபெறும். இம்முகாமிற்கு லெப்டினன்ட் கர்னல் ஒய்னம் அவர்கள் கமான்டிங் அதிகாரியாக உள்ளார். பத்து நாட்கள் நடைபெறும் இம்முகாமில் கோவை 4- பட்டாலியனின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்களும், நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் அனிர்பன் பெளமிக் அவர்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர்படை அலுவலர்களும், சுபேதார் மேஜர் பாண்டியன் தலைமையிலான இராணுவத்தினரும் பயிற்சி அளித்து வருகின்றனர். கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, சேலம், நாமக்கல், திருச்சங்கோடு, தர்மபுரி பகுதிகளைச் சார்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ, மாணவியரும் பங்கேற்றுள்ளனர். இம்முகாமில் குடியரசு தின முகாமிற்கான சிறந்த மாணவர் தேர்வு, கலைநிகழ்ச்சிகள், என். சி. சி. வகுப்புகள், துப்பாக்கி சுடுதல், ஆயுதப் பயிற்சிகள், அணிவகுப்பு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி