சூலூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று திடீரென்று அதிகாலை சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு பணியை மேற்கொண்டார். அதிகாலையிலேயே புற நோயாளிகள் அதிக அளவில் இருந்தனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனையின் சிகிச்சை பற்றியும் பராமரிப்பு பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவமனையின் சார்பில் மருத்துவரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து தர வேண்டியும் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அமைச்சர் விரைவில் அதற்குண்டான ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார் ஆய்வின்போது கோயமுத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை மருத்துவர் வாணி ரங்கராஜன், மருத்துவர் கஜேந்திரன் மற்றும் பணி செவிலியர்கள் உடனிருந்தனர்.