கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரை பள்ளியில் சுத்தம் செய்த குப்பைகளை ஒரே நேரத்தில் போட்டு தீ வைக்குமாறு பள்ளித் தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது குப்பையை நன்றாக இருக்கும் படியும் அந்த மாணவனிடம் பள்ளி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் அந்த குப்பையை கிளறும் போது எதிர்பாராத விதமாக மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது இதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயம் அடைந்துள்ளான் பின்னர் தனியார் மருத்துவமனையில் அந்த மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். அந்த மாணவனின் சிகிச்சைக்காக முழு பொறுப்பினையும் தலைமை ஆசிரியர் ஏற்றுக் கொள்வதாக அந்த மாணவனின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது இந்நிலையில் தற்போது அவ்வாறு செய்ய முடியாது என தலைமை ஆசிரியர் பின்வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பள்ளியில் மாணவர்களை வேலை செய்ய பணிக்கப்படுவதாக கூறி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் உடனடியாக தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் எனவும் அப்படி மாற்றாகவிட்டால் பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்ப மாட்டோம் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.