கோவை மாநகராட்சியை விரிவுபடுத்தும் நோக்கில் 200 வார்டுகளை உருவாக்குவதற்காக பட்டணம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பட்டணம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருவதால் மாநகராட்சி உடன் இணைக்க கூடாது எனவும் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கிராம இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாநகராட்சி உடன் இணைந்தால் வரிகள் மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனவும் மாநகராட்சி உடன் ஏற்கனவே இணைந்த மற்ற ஊராட்சிகளுக்கு இதுவரை எந்தவிதமான வசதிகளும் கிடைக்க பெறவில்லை எனவும் குற்றம் சாட்டி பட்டணம் பகுதியில் இணைக்க வேண்டாம் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.