கோவை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாகன எண்கள், வாகனத்துக்கான சான்றிதழ்கள், ஹெல்மெட் அணிந்து வருவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கிறார்களா என்பது சோதனை செய்யப்பட்டது. கருமத்தம்பட்டி உட்கோட்ட பகுதிகளில் உள்ள சூலூர், கருமத்தம்பட்டி, கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட எஸ். பி உத்தரவின் பேரில் இந்த சோதனையானது நடைபெற்றது. இதில் ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.