சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, குடிநீர் வரியை குறைக்க வேண்டும் போதை பொருள் பழக்கத்தை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏழு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சூலூர் எம்எல்ஏ
கந்தசாமி,
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏசுரூமில் இருந்து கொண்டு வெளியே வராமல் இருந்தால், மக்கள் பிரச்சனை எப்படி தீரும் வெளியே வந்து மக்களை சந்தித்தால் மட்டுமே பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடியும். முதலில் ஈஸி ரூமில் இருந்து வெளியே வாருங்கள் எனவும் இலங்கையை போன்ற போராட்டம் தமிழகத்திலும் நிகழும் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என சூலூர் எம்எல்ஏ காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.