கோவை: மாதந்திர பரமாரிப்பு பணிகள்..மின்தடை அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய துணை மின் நிலையங்களில் இன்று (அக்டோபர் 16) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளால், சேரன்மாநகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே. ஆர். பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். கீரநத்தம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பணிகளால், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, விளாங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சங்கரவீதி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும்.