கிணத்துக்கடவு - Kinathukadavu

கே. கே. புதுார்: வங்கி அதிகாரியிடம் 16 லட்சம் மோசடி!

கே. கே. புதுார்: வங்கி அதிகாரியிடம் 16 லட்சம் மோசடி!

கோவை கே. கே. புதுார் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி(75). இவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என இருந்தது. இதையடுத்து சேதுபதி மெசேஜில் குற்றிப்பிட்டு இருந்த எண்ணை தொடர்பு கொண்டு தனது விவரங்களை அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் தங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் படி தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய சேதுபதி, பல்வேறு தவணைகளாக அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 16. 25 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். அதன் பின் அவருக்கு எந்த லாப தொகையும் வரவில்லை. செலுத்திய தொகையும் திரும்ப பெற முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சேதுபதி, இதுகுறித்து நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా