கிணத்துக்கடவு - Kinathukadavu

கிணத்துக்கடவு: நொச்சி ஆடாதொடா வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

கிணத்துக்கடவு: நொச்சி ஆடாதொடா வளர்க்க விவசாயிகளுக்கு அழைப்பு

கிணத்துக்கடவு வட்டாரத்தில் நொச்சி, ஆடாதொடா போன்றவை அதிகளவு பயிர் செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. இதில், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் வாயிலாக, உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய தாவரங்களான நொச்சி மற்றும் ஆடாதொடா பயிரிட நாற்று வழங்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, இரண்டு பயிர்களும் சேர்த்து 10800 நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்க இருப்பு உள்ளது. ஒரு விவசாயிக்கு 50 நாற்றுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார், துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் இது பற்றி இன்று கூறியிருப்பதாவது, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து, நொச்சி மற்றும் ஆடாதொடா போன்ற இயற்கை பூச்சி விரட்டி பயன்பாடுகளை நடைமுறைக்கு விவசாயிகள் கொண்டு வர வேண்டும். இதை பயன்படுத்துவதன் வாயிலாக, பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதலை முன்கூட்டியே கட்டுப்படுத்தலாம். சாகுபடி செலவினங்களை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த முடியும் என கூறியுள்ளனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా