கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் கனமழையால் தேங்கியிருந்த மழைநீரை 12 மணி நேரத்தில் அகற்றிய மைதான ஊழியர்களுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் இந்திய வீரர் உனத்கட் வீடியோ பதிவிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், "அனைத்து நிலை கிரிக்கெட்டுகளுக்கும் சிறந்த உள்கட்டமைப்பை பெற்றுள்ளது தமிழ்நாடு. TNCA-ன் இந்த செயல் மற்ற கிரிக்கெட் சங்கங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.