பேரூர்: வெள்ளக் காடாக மாறிய வேளாண் பல்கலை!

67பார்த்தது
கோவையில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் அதிகபட்சமாக 6. 86 செ. மீ. மழை பொழிவு பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் உழவர் நலத்துறை இயங்கும் வளாகம் மற்றும் ஆய்வகங்களில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வளாகத்தின் சாலைகள் வரை மழை நீர் தேக்கமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் வெள்ளத்தில் வாகனத்தை ஓட்ட முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கனமழையால் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பணிகள் மற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தாமதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ள நீர் வடிந்த பின்னர் ஏற்படக்கூடிய சேதங்களை மதிப்பிடும் பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி