
கோவை: சின்னத்தடாகம் பகுதிகளில் இன்று மின்தடை
கோவை, சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரிய தடாகம், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.