கோவையில் தொழிலதிபர் உட்பட 2 பேர் தற்கொலை
கோவைப்புதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி ராஜலட்சுமி (21). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. 3 மாதத்தில் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமி அடிக்கடி ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டதாக தெரிகிறது. இதனை அவரது தாயார் கனி கண்டித்துள்ளார். இதனால் தாயாரிடம் அவர் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.,19) ராஜலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் சிங்காநல்லூர், அருகே உள்ள ராவத்தூர் வைக்கம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (33). டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த அவர் நேற்று(அக்.19) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.