தியாகராய நகர் - Thiyagarayanagar

தமிழகத்தில் விரைவில் அரசியல் மாற்றம் - பாஜக செய்தித் தொடர்பாளர்

விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் என தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ. என். எஸ். பிரசாத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதல்வரின் கருத்தை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என முதல்வர் சொல்லியது, ஊழல் பணத்தை சேர்த்துக் கொண்டிருக்கும் திமுக அமைச்சர்கள், சந்தர்ப்பவாத திமுக கூட்டணி அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும். ஆனால் மக்கள் விரோத ஆட்சியில் இந்த முறையாவது அமைச்சரவை மாற்றம் மூலம் நல்லது நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு மட்டும் ஏமாற்றம் தான் இருக்கும் என்பதை தனக்கே உரிய பாணியில் முதல்வர் சூசகமாக சொல்லி உள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியிலும், தமிழக ஆட்சியிலும் மாற்றம் இருக்க வேண்டும் என்று திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் விழிப்புடன் வாக்களிக்க காத்திருக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று விரும்பும் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். விரைவில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் இருக்கும் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

வீடியோஸ்


சென்னை
Sep 25, 2024, 13:09 IST/மைலாப்பூர்
மைலாப்பூர்

பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்க தொகை

Sep 25, 2024, 13:09 IST
பாராலிம்பிக்கில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு. க. ஸ்டாலின் ரூ. 5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தியதுடன், நெசவாளர்களுக்கான விருதுகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று காலை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ. 5 கோடிக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார். இதையடுத்து, கடந்த 2023-24-ம் ஆண்டுக்கான பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு தேர்வான 6 விருதாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ, 20 லட்சத்துக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார். சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வானவர்களுக்கு ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களையும், போட்டித் தேர்வு மூலம் சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட வடிவமைப்பாளர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. 2. 25 லட்சத்துக்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.