திருப்பூர் மாவட்டம் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், தன்னிடம் உள்ள ஜீப்பை வைத்து இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இரண்டு சிறுமிகளை ஆபத்தான முறையில் ஜீப் ஓட்ட வைத்து, அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த பலரும், காளிமுத்துவுக்கு எதிராக கண்டம் தெரிவித்து வருகின்றனர்.