ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி பேரணி

81பார்த்தது
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி பேரணி
மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று (செப்.24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டுக்குபிறகு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழகஅரசு மாற்றியமைக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆன பிறகும் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி விரைந்து மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் பைக் டாக்சிக்கு தடை விதிக்கவேண்டும். ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று ஆட்டோஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் சென்னையில் கோட்டை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். எழும்பூர் பழைய சித்ரா திரையரங்கம் அருகே பேரணியாகச் செல்ல முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்புடைய செய்தி